Tuesday, April 21, 2009

அண்மையில் படித்த கதை

0 comments

அண்மையில் ஒரு கதை படித்தேன்.ஒரு அழகிய பண்ணை வீடு.அவ் வீட்டில் கணவன்,மனைவி இருவர் மட்டும் வசித்தனர். அங்கு எலி தொல்லை இருந்த்தால் ,அவ்வீட்டுகாரர் எலிபொறி கட்டை ஒன்றை வைத்து எலிகளைப் பிடிக்கலாம் என எண்ணி எலிப்பொறிகட்டை ஒன்றை வைத்தனர் .அதை பார்த்த ஒரு பெருச்சாளி ஐய்ய... யோ நாம மாட்டிக்கப் போறமுனு


நினைத்து,அழுதது.சரி நமக்கு ஏற்பட்ட நிலையை நண்பர்களிடம் சொல்லாம் என எண்ணி முதலில் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று கூறியது,உடனே கோழி எலிப்பொறி கட்டையால் எனக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அதனால்,உனக்கு ஆபத்து என்றால் நீயே பார்த்துக் கொள் என்றது.பெருச்சாளிக்கு மிகுந்த வருத்தமாக போய்விட்டது.


சரி அடுத்து அங்குள்ள நம் நண்பன் ஆட்டிடம் முறையிடலாம் எனச் சென்று ஆட்டிடம் சென்று ஓ என அழுதது,ஆடு கேட்டது எதற்காக இப்படி ஒப்பாரி வைக்கறாய்,உனக்கு என்ன ஆகிவிட்டது என்றது.பெருச்சாளி உடனே என்க்கு ஆபத்து வந்துவிட்டது. என்னை பிடிக்க பண்ணை வீட்டில் எலி பொறி கட்டை வைத்துள்ளனர்.நான் பிடிபட்டுவிடுவேன்.என்க்கு பயமாக உள்ளது என்றது.


உடனே ஆடு கோழி சொன்ன பதிலையே தந்தது.ஐயோ நமக்கு யாரும்
உதவமாட்டார்களா என எண்ணி,அடுத்து நம் நண்பன் மாடு இருக்கிறானே அவனிடம் சென்று முறையிடலாம் என எண்ணி,மாட்டிடம் சென்று கூறியது ,மாடும் அதே மறுமொழியைக் கூறியது.பெருச்சாளி மிகவும் நொந்துவிட்டது.என்ன செய்வது இன்று நாம் வெளியில் வராமல் இருப்போம் என எண்ணி வளையை விட்டு வெளியில் வராமல் இருந்தது.இரவு முழும் பயந்து கொண்டே வெளியில் வரவில்லை.விடிந்தது,எலிப்பொறியில் ஒரு பாம்பு வால் மட்டும் சிக்கிக் கொண்டு தவித்துக்கொண்டு இருந்து.அந்த பக்கமாக அந்த வீட்டின் எஜமானி அம்மாள் வந்தாள் ,இரவு முழுதும் அந்த பாம்பு சிக்கி இருந்த்தால்,அந்த பாம்பு அவளைக் கடித்துவிட்டது.


அவளுடைய்ய கணவன் மருத்தவரிடம் அழைத்துச் சென்றான்.அங்கு பச்சிலை மருந்து கொடுத்து, விரைவில் குணமடைந்து விடும் ,வீட்டிற்குச் சென்று கோழி அடித்து , சூப் குடிங்க என்று மருத்துவர் கூறினார்.வீட்டற்கு வந்து கோழியை அடித்து சூப் வைத்து குடித்தாள்.அவளைப் பார்க்க அவளுடைய சொந்த பந்தம் எல்லாம் வந்தார்கள்.


அவர்களுக்கு உணவு வழங்க ஆட்டை அடித்தார்கள்.மனைவிக்கு குணமாவுடன் தன்னுடைய குலதெய்வத்திற்கு காளைமாட்டினைப் பலியிடுவதாக கணவன் வேண்டிக்கொண்டான் அதன் படி மனைவி குணமடைந்தவுடன்,காளைமாட்டினைப் பலியிட்டு ,ஊர் மக்கள் அனைவருக்கும் வழங்கினான்.இவை அனைத்தையும் பெருச்சாளி தன்னுடை வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்து.


இப்படித்தான் நாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை பாதிக்காது என எண்ணுகிறோம்,அதனைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றோம். சிந்திப்பீ

மறுமொழிகள்

0 comments to "அண்மையில் படித்த கதை"

Post a Comment

தொடர்பவர்கள்

தோழமைப் பூக்கள்

பிடித்தவைகள்

 

Copyright 2008 All Rights Reserved LIMATION TECHNOLOGIES